February 20, 2018
தண்டோரா குழு
நான் பூ அல்ல ; விதை… என்னை விதைத்து பாருங்கள் முளைப்பேன் என மு.க.ஸ்டாலின் அறிக்கை குறித்து நடிகர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.
திமுக செயல் தலைவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால் மணக்காது பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் மலரும்; மலர்ந்து உதிரும் பூக்களுக்கு மத்தியில் திமுக ஆயிரங்காலத்துப் பயிர் என கூறியிருந்தார். ஸ்டாலின் இந்த அறிக்கை புதிதாக அரசியல் களத்திற்கு வந்திருக்கும் ரஜினி, கமல்ஹாசன் குறித்து தான் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசினார். அப்போது ஸ்டாலின் அறிக்கை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல் மு.க.ஸ்டாலின் என்னை பற்றி சொல்லியிருக்கமாட்டார் நான் பூ அல்ல ; விதை… என்னை விதைத்து பாருங்கள் முளைப்பேன். என்னை நுகர்ந்து பார்த்தல் மணக்காது என்றார்.
மேலும், நான் திமுகவுடன் கூட்டணி வைப்பேன் என்று ஒருபோதும் கூறியது கிடையாது என்றும்,நாளை மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன் வருகிறார்கள் என்று கூறினார்.