• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நான் சொன்னா முதல்வர், துணை முதல்வர் சொன்ன மாதிரி தான் – தம்பிதுரை

January 9, 2019

10 சதவிகிதம் இடஒதுக்கீட்டிற்கான சட்ட மசோதா இயற்றும் போது 37 பேர் மக்களவையில் இருந்திருந்தால் வேறு மாதிரி இருந்துருக்கும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

மக்களவையில் பொருளாதாரத்தில் நலிவுற்ற 10% இட ஒதுக்கீடு மசோதா நிறைவெற்றப்பட்டுள்ளது. ஊழல் ஏற்படவும், சமூக நீதி மறுக்கப்படவும் வாய்ப்புள்ளது வர்ணாசிரம தர்மப்படி, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று வகுத்துள்ளனர். வேதம் ஓதுபவர்கள் பிராமணர்கள். நாட்டை ஆள்பவர்கள் சத்திரியர். வியாபாரம் செய்பவர்கள் வைசியர். மற்ற தொழில் செய்யும் அனைவரும் சூத்திரர்கள். அப்படி என்றால் நாம் அனைவருமே சூத்திரர்கள்தான்.

பெரியார் அனைவருக்கும் கல்வி சமூக முன்னேற்றத்துக்கு பாடுப்பட்டவர் , அம்பேத்கர் போன்றவர்கள் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டாம் என தெரிவித்தார். இளைய சமுதாயம் பெயரின் பின்னால் சேர்ப்பதில்லை.ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத்தில் உள்ளவர்கள் சாதியின் பெயரை தங்கள் பெயருடன் சேர்த்து கொள்கிறார்கள். ஏன் பிரதமரே மோடி என்று குறிப்பிட்டுள்ளார்.ஆனால் அப்படி தமிழகத்தில் இல்லை, அதற்கான புரட்சி தமிழகத்தில் ஏற்படுத்தியது திராவிட கட்சிகள் என தெரிவித்தார்.

மேலும், 10% இட ஒதுக்கீடு தீங்கு விளைவிக்கக்கூடிய சட்டம். தமிழகம் தான் எல்லாவகையிலும் முன்னோடி, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது தவறு. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒட்டு வாங்கவே பாஜக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.10% இட ஒதுக்கீடு இத்திட்டம் மிகவும் கண்டிக்கதக்கது. அதிமுக இந்த சட்டத்துக்கு எதிராக குரல் எழுப்புகிறது.வாக்கு வங்கிகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அம்பேத்கர் போன்ற வந்த சட்டங்களில் திருத்தம் என்பது தவறு, பணக்காரர்கள் மட்டுமே பயன் அடைவார்கள். அச்சட்ட மசோதா இயற்றும் போது, 37 பேர் மக்களவையில் இருந்துயிருந்தால் வேறு மாதிரி இருந்துருக்கும் தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகிறார்கள், வட இந்தியர்களுக்கு ஒரு நிதி, தென் இந்தியர்களுக்கு அநீதி செய்வதாக புகார் கூறினார். பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை எனவும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு அதிமுக மீது கூறி வருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

அகஷ்ட்ரா விமானம் வாங்க முடிவு எடுத்தது பாஜக, ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் வாங்கினர், காங்கிரஸ், பாஜக மேட்ச் பிக்சிங் எனவும், பாஜக, காங்கிரஸ் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளாதாகவும் அதற்கு எடுத்துக்காட்டு ஆக்ஸ்ட்ரா விமானம் தான் அதை மக்கள் கூற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். எங்களுக்கு காவேரி என்பதே முக்கியம் என்றும் 10% இட ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு அதிமுக வண்மையாக எதிர்க்கிறது. ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் கூறினார்.

அதிமுக இயக்கம் ஒன்றுப்பட்டு தான் செயல்பட்டு வருகிறது. நான் சொன்னா முதல்வர், துணை முதல்வர் கூறியது போன்றது தான்அதிமுக கூறிய கருத்து தான் என்றும் தெளிவுப்படுத்தினார்.மத்திய அரசுடன் உறவு என்பது வேறு, கட்சியுடன் கூட்டணி என்பது வேறு. தமிழக அரசை இயக்குவது தமிழக மக்கள் என்றும் பாஜகவில் ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட இல்லை எப்படி அவர்கள் இயக்க முடியும் எனவும் அப்போது அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க