• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் -கோவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

December 19, 2024 தண்டோரா குழு

கோவை,காந்திபுரம் அருகே பெத்தேல் மாநகரப் பேராலயத்தில் கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.இதில் சிறப்பு விருந்தினராக,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:

கடந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையில் பங்கேற்று’நானும் ஒரு கிறிஸ்தவன்தான்’ என,பெருமையாக கூறினேன்.அது பலருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியது.நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்.நீங்கள் என்னை கிறிஸ்தவன் என நினைத்தால் கிறிஸ்தவன்; இஸ்லாமியர் என்று நினைத்தால் இஸ்லாமியன்;ஹிந்து என்று நினைத்தால் ஹிந்து. எல்லா மதங்களிலும் அடிப்படை அன்பு.

அதைத்தான் எல்லா மதங்களும் சொல்லிக் கொடுக்கின்றன.அதே மதத்தை வைத்து, அரசியல் நடத்துபவர்கள்,மக்கள் மத்தியில் வெறுப்பை பரப்புவார்கள்;அவர்கள் உண்மையை பேசமாட் டார்கள். அரசியலமைப்புக்கு எதிராக பேசிய நீதிபதி ஒருவரை பதவி நீக்கம் செய்ய நாங்கள் குரல் கொடுத்தோம்;தீர்மானம் நிறைவேற்றினோம்.

ஆனால்,அ.தி.மு.க.,வினர் தீர்மானத் தில் கையெழுத்து போடவில்லை.’ஒரே நாடு ; ஒரே தேர்தல்’ என்பதற்கும், அவர்கள் ஆதரவு தெரிவிக் கின்றனர்.அவர்கள் பா.ஜ.,வினருடன் கள்ள கூட்டணி வைத்துள்ளனர்.தி.மு.க.,இருக்கும் வரை சிறுபான்மை மக்களுக்கு என்றும் பாதுகாப்பு இருக்கும்.உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்போம்.

இவ்வாறு,அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கோவி.செழியன்,எஸ்.பி.சி., பெந்தெகொஸ்தே சபைகளின் பிரதம பேராயர் டேவிட் பிரகாசம்,மாநிலத் தலைவர்கள் ஜி டேவிட் பிரகாசம்,சங்கை கேபி எடிசன், பாஸ்டர் வினிஸ் சதீஷ்,ஜான்சன் பாண்டியன், எஸ்.ஆனந்த் ஞானசேகரன், வின்சென்ட் லூர்து, ஜோ டேவிட், ஆர்சூரி ஸ்டீபன் செயற்குழு உறுப்பினர்கள் ஜான் ஜெயராஜ், பிரட்ரிக் குணசீலன், ரெக்ஸ் யேசுராஜ், ஜோசுவா ஜெகநாதன்,ஜோசப் பீட்டர், கிளமெண்ட், நந்தானியல்,பால்ராஜ் கிருபாகரன்,யோகன் ராஜா கோவை பெந்தேகோஸ்தேசபைத் தலைவர்கள் டாக்டர் ஹாரி கோம்ஸ் ,உட்பட டாக்டர் ஜவகர் சாமுவேல் மற்றும் தலைவர்கள் சாம்சன், எட்வர்ட் பீட்டர், பிரகாசம்,ஜான்சன் சத்யநாதன் வசந்த் சத்யநாதன், ஜெயசீலன், ராஜா தாஸ், ஜெயபால் ஜோசப், மனோஜ் பி.ஆர்.ஓ.சாம் தேவநேசம் உள்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க