• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்சி வரை சைக்கிள் பேரணி

April 21, 2022 தண்டோரா குழு

“அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை நிரந்தர பணியிடங்களாக உருவாக்கிட வேண்டும், சிறு குறு தொழில் நிறுவனங்களை பாதுகாத்திட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை விற்கக் கூடாது” என்கின்ற 4 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சியில் மே1 ம் தேதி மாபெரும் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்திற்கு கலந்துகொள்ள தமிழகத்தில் நான்கு மூலைகளில் இருந்து (சென்னை, கன்னியாகுமரி, கோவை, பாண்டிச்சேரி) சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சைக்கிள் பயணக்குழுவிற்கு DYFI ன் மாநிலத் துணைச் செயலாளர் சி.பாலசுந்திரபோஸ் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு தொடங்கப்பட்ட இந்த பயண குழுவானது துடியலூர் ஆவாரம்பாளையம் சிங்காநல்லூர் வழியாக திருச்சி செல்கிறது. இந்த சைக்கிள் பயணத்தை DYFI இன் கேரள மாநில செயலாளர் தாமஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

முன்னதாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில் கோவை மாவட்ட DYFI அமைப்பினர், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், CITU கோவை மாவட்ட தலைவர் பத்மநாபன், SFI கோவை மாவட்ட செயலாளர் தினேஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயண குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த பாலசுந்திரபோஸ்,

ஒன்றிய அரசு 9 லட்சத்தும் மேல் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறிய ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை தருவதாக கூறிவிட்டு கடந்த 1 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பை வழங்கி உள்ளது. எனவே மத்திய மற்றும் மாநில அரசு உடனடியாக வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மேலும் மத்திய அரசு மத வெறியை தூண்டி விடுதாகவும் அதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனுமதிக்காது என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க