March 11, 2020
தண்டோரா குழு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லோகேஷை நேரில் சந்தித்த விஜய்சேதுபதி, அவருக்கு மருத்துவ செலவை வழங்கியுள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘நானும் ரௌடி தான்’ . விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் லோகேஷ் பாபு. இவர் ஆதித்யா தொலைக்காட்சியில் நிகழ்ச்சிதொகுப்பாளராக இருந்தார்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு திடீரென ஸ்டோக் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது இடது கால், இடது கை செயலிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது நண்பர்கள் லோகேஷை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்காக நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டனர். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லோகேஷை நேரில் சந்தித்த அவருக்கான மருத்துவ செலவையும் வழங்கியுள்ளார்.அப்போது லோகேஷ் உடன் விஜய் சேதுபதி நெகிழ்ச்சியுடன் உரையாடும் வீடியோ ஒன்றும் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது