March 23, 2018
தண்டோரா குழு
கோவையில் திருநங்கை கவிஞர் கல்கி சுப்பிரமணியம் எழுதி இயக்கியுள்ள வடு என்ற தலைப்பில் ஆறு கவிதை குறும்படங்கள் கோவை ரேஸ்கோர்ஸ் ஆர்த்ரா அரங்கில் நேற்று(மார்ச் 23)திரையிடப்பட்டது.
திருநங்கைகள் மேல் சமூகம் திணிக்கும் பொய்யான அடையாளங்களை கேள்வி கேட்டும்,சமூக அவலங்களை கவிதைகள் மூலமாக கேள்வி கேட்டுகும் வண்ணம் கவிதை காணொளிகளாக சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டு இருந்தன.
தமிழ் உலகில் இது ஒரு புதிய முயற்சி,கவிதைகள்,ஓவியம், படங்கள் வழியாக தொடர்ந்து சமூக அவலங்களை எனது படைப்புகளில் வழங்குவேன். நாட்டை ஆண், பெண் ஆண்டது போதும் இனி நாட்டை திருநங்கைகள் ஆள வேண்டும் என்று திருநங்கை கல்கி சுப்பிரமணியம் பேட்டியளித்தார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் லீமா ரோஸ் மார்டின் மற்றும் எழுத்தாளர் ரேவதி , ஓவியர் ஜீவானந்தம் , சாந்தி சுரேஷ், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.