• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாட்டுக்கோழி விற்பனையில் தூள் கிளப்பும் கம்ப்யூட்டர் இன்ஜினியர்

August 21, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துள்ளார்.
இவருக்கு கால்நடை வளர்ப்பில் ஆர்வம் இருப்பதால் நாட்டுக்கோழி விற்பனையில் இறங்கிவிட்டார். ஆரம்ப காலத்தில் இவரது பெற்றோர் இதை எதிர்த்துள்ளனர். ஆனாலும் நாட்டுக்கோழி விற்பனையை மேற்கொண்டு அதில் அதிகம் சம்பாதித்துள்ளார்.

இதுகுறித்து கிருஷ்ணகுமார் நம்மிடம் கூறியதாவது:

கடகநாத், நாட்டுக்கோழி, முயல், வாத்து, போன்றவைகளும் விற்பனை செய்கிறேன். அன்னூரில் இருந்து பைக்கில் சென்று சத்தியமங்கலம், ஊட்டி, கோவை நகர் பகுதிகள் என பல்வேறு இடங்களுக்கு சென்று விற்பனை செய்வேன். மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதிப்பேன். இத்தொழிலில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. மனதிற்கு பிடித்து தான் இந்த வேலை செய்கிறேன். மக்களிடையே ஏற்பட்டுள்ள நாட்டுக்கோழி விற்பனை ஜோரா நடக்குது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க