November 26, 2021
தண்டோரா குழு
கடந்த 2012ல் ஈரோட்டில் செயல்பட்டு வந்த அன்பு பவுல்ட்டரி பார்ம்ஸ் என்ற பெயரில் நாட்டுக்கோழி பண்ணை நிறுவனம் நடத்தி 107 முதலீட்டாளர்களிடம் ரூ.2.25 கோடி மோசடி நிறுவனத்தை நடத்தி வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சசி, ஆனந்தன், செந்தில்குமார் ஆகிய 3 பேருக்கு தலா ஒரு நாள் சிறை தண்டனையும், ரூ.4.95 லட்சம் அபராதம் மூவரும் சேர்ந்து செலுத்தவும் கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சட்டம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரத்தினசாமி என்பவர் விடுதலை ரூ.1.50 லட்சம் செலுத்தினால், செட் அமைத்து கொடுத்து, 3750 நாட்டுக்கோழி குஞ்சுகள் கொடுத்து, அதற்கு தேவையான மருந்துகள், தீவனங்கள் ஆகியவற்றையும் கொடுத்து, மாதம் மற்றும் ஆண்டுதோறும் 9,000 ரூபாய் ஊக்கத்தொகையாக கொடுப்பதாகவும், மூன்று வருட கால ஒப்பந்தம் என விளம்பரம் செய்து மோசடி செய்துள்ளார்.
முதலீட்டாளர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளில் சிறுக சிறுக பணம் கொடுத்து முழுவதுமாக மோசடி செய்யப்பட்ட தொகை செலுத்தப்பட்டது. அதனால், மோசடி பிரிவிற்கு மட்டும் தண்டனை பெற்ற 3 பேருக்கும் தலா ஒரு நாள் சிறை தண்டனையும், 4 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் அபராதம் 3 பேரும் சேர்ந்து செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.