• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாட்டில் பல மாநிலங்களில் நீர் ஆதாரங்கள் நிலைமை மிக மோசமாக உள்ளது – வல்லுநர்கள் கருத்து

September 19, 2022 தண்டோரா குழு

கால நிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் நீர் ஆதாரங்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது என காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட தண்ணீர் 2022 கருத்தரங்கில் பங்கேற்ற வல்லுநர்கள் தெரிவித்தனர்.

கோவை காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் தண்ணீர் 2022 என்ற தலைப்பில் கருத்தரங்கு கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தண்ணீர் மேலாண்மைதுறை சார்ந்த வல்லுநர்கள் பலர் பங்கேற்று பேசினர். கருத்தரங்கு முடிவில் வல்லுநர்கள் முன்னிலையில், பல்கலை இணை துணை வேந்தர் ஜேம்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

நாட்டில் பல மாநிலங்களில் நீர் ஆதாரங்களின் நிலையை மிக மோசமாக உள்ளது. கால நிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணமாகும். இமயமலையில் பனிசிகரங்கள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் வெள்ளம், வறட்சி போன்றவை அதிகம் காணப்படுகிறது. கடல்நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கேரளா, ஒடிசா, காஷ்மீ்ர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் அதிகம் ஏற்படுகிறது.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நிலத்தடி நீர் ரசாயனங்கள் மற்றும் கிருமிகளால் மாசடைந்து வருகிறது. நீர் ஆதாரங்களின் இன்றைய நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது. தமிழகத்தை பொருத்தவரை நீர் ஆதாராங்களின் நிலையை பருவமழை தான் நிர்ணயம் செய்கின்றன. மழை நன்றாக பெய்தால் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது. பரும மழை சரிவர பொழியவில்லை என்றால் வறட்சி ஏற்படும். தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

பெங்களூரு நகரில் சமீபத்தில் காணப்பட்ட வெள்ள பாதிப்பு இதற்கு சிறந்த சான்றாகும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நீர் ஆதாரங்களின் இன்றைய நிலை மற்றும் அதை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைகள் கருத்தரங்கில் வல்லுநர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க