• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாட்டிலேயே முதல் முறையாக பொறியியல் கல்லூரியில் கிராபிக் டிசைன் பட்டப்படிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

April 28, 2021 தண்டோரா குழு

நாட்டிலேயே முதல் முறையாக பொறியியல் கல்லூரியில்கிராபிக் டிசைன் பட்டப்படிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கே.பி.ஆர்.கல்லூரி மற்றும் மாயா அகாடமி இடையே செய்யப்பட்டது.

பல்கலைக்கழக மானியக்குழு கல்வி முறையில் புதிய மாற்றமாக தொழில்முறை கல்விகளை ஊக்குவித்து வருகின்றது.இந்நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக பொறியியல் கல்லூரியில் அனிமேட்டிக்ஸ் தொடர்பான புதிய கல்வி முறையை பயிற்சி அளிக்கும் விதமாக கே.பி.ஆர்.கல்லூரியுடன் மாயா அகாடமி ஆப் அட்வான்ஸ்டு சினிமேட்டிக்ஸ் எனும் மேக்குடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதற்கான விழாவில் பாராதியார் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் காளிராஜ் கலந்து கொண்டார்.

இதில் அவர் பேசுகையில்,

தற்போது தொழில் முறை கல்விகளை கற்பதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும், பட்டபடிப்பை முடிக்கும் மாணவர்கள் தொழில் சார்ந்து இருப்பதையே விரும்புவதாக கூறிய அவர், பொறியியல் துறையில், இன்றைய தலைமுறைக்கு அனிமேசன் மற்றும் கிராபிக்ஸ் டிசைன் படிப்புகள் நிச்சயமாக மாணவர்களின் எதிர்காலத்திற்கு உதவும் என்றார்.

மாயா அகாடமி ஆப் அட்வான்ஸ்டு சினி மேடிக்ஸ் மற்றும் ஜே.டி.கல்வி மற்றும் பயிற்சி மையத்தினருடன் இணைந்து கல்லூரியில் பட்ட படிப்பு அறிமுகபடுத்தபட்டுள்ள நிலையில்,இந்த படிப்புக்கு உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உள்ளது குறிப்பிடதக்கது.

நிகழ்சியில் தலைமை செயல் அதிகாரி சம்ஜித் தன்ராஜ், முதல்வர் அகிலா, தனராஜன்,சமீர் உசைன், மணிகண்டன், ரமேஷ்,பிரேம் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க