• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாட்டிலேயே முதன் முறையாக கோவையில் தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி வழங்கும் திட்டம் !

July 20, 2021 தண்டோரா குழு

நாட்டிலேயே முதன் முறையாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் சி.எஸ்.ஆர் நிதி மூலம் இலவசமாக தடுப்பூசி வழங்கும் திட்டம் செயல்படுத்த உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழக கேரள எல்லையான மாவுத்தம்பதி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அந்த பகுதிகளில் ஜிகா வைரஸ் குறித்த விழிப்புணர்வு,மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மருத்துவ முகாமை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பேசிய அவர்,

கொரோனா பேரிடரால், உலகம் சவாலைக் சந்தித்து வரும் நிலையில்.அடுத்தடுத்த வைரஸ் பாதிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் தற்போது கேரளாவில் ஜிகா வைரஸ் பரவி வரும் நிலையில்,அது தொடர்பாக தமிழக – கேரளா எல்லை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், மேலும்,ஜிகா வைரஸ் நோயை கட்டுபடுத்தும் விதமாக ஆய்வுகளும் மேற்கொண்டதாக கூறிய அவர்,மாநிலம் முழுவதும் நகராட்சி ,மாநகராட்சி ஊரக பகுதிகளில் 21000 பேர் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், கொசுக்களை லார்வா நிலையிலே அழிக்கும் விதமாக கம்ப்யூசியா மீன்களைக் வளர்த்து அதன் மூலமும் கொசு ஒழிப்பு பணிகளைக் கோவை மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு தான் அதிகம் தடுப்பூசி ஒதுக்கியுள்ளோம் 109700 தடுப்பூசிகளைக் கோவைக்கு வழங்கியுள்ளோம். தனியார் மருத்துவமனைகளிலும் சி.எஸ்.ஆர் நிதி மூலம் இலவசமாக தடுப்பூசி வழங்க இருக்கிறோம்.அதைக் இந்தியாவிலே முதல்முறையாக கோவையில் செயல்படுத்த இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்ரபாணி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவுத்தம்பதி ஊராட்சி தலைவர் கோமதி செந்தில் குமார் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க