• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாட்டிலேயே முதன் முறையாக கோவையில் மேலாண்மை கல்வி மென்பொருள் ஆய்வகம் திறப்பு

March 30, 2019 தண்டோரா குழு

கோவையில்தகவல் பரிமாற்ற காலத்திற்கு தகுந்தாற் போல நாட்டிலேயே முதன் முறையாக மேலாண்மை கல்வி மென்பொருள் ஆய்வகம் கோவையில் துவங்கப்பட்டது.

மேலாண்மை கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தாங்கள் கல்வி பயிலும் போதே தொழில் சார்ந்த அனுபவ திறமைகளை வளர்த்தி கொள்ளும் விதமாக புதிய மென்பொருள் ஆய்வகத்தை அனைத்திந்திய மேலாண்மை சங்கத்தினர் உருவாக்கியுள்ளனர்.இதற்கான துவக்க விழா கோவையில் நடைபெற்றது. நாட்டிலேயே முதன் முறையாக துவங்கப்பட்ட இந்த ஆய்வகம் கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள fire bird மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் துவங்க உள்ள நிலையில் இதற்கான MOU செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆய்வு நிறுவனத்தின் அறங்காவலர் சுந்தர ராமன் மற்றும் மேலாண்மை மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் நீரஜ் கபூர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்..இதில் தற்போது மேலாண்மை தொடர்பான கல்வியை வழங்க, நவீன தகவல் தொடர்பு நுட்பங்களை பயன்படுத்துவது அவசியம். இதற்கு கல்வியாளர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் மட்டும் அல்லாது நவீன முறையிலான இது போன்ற மென்பொருள் ஆய்வகங்களில் மாணவர்கள் பயிலும் போது நல்ல திறன் சார்ந்த அனுபவங்களை பெற இயலும் என தெரிவித்தனர்.

விழாவில் மேலாண்மை ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க