July 14, 2018
தண்டோரா குழு
நாட்டின் மூன்றாவது திருநங்கை நீதிபதியாக அசாம் மாநிலத்தில் சுவாதி பிதான் ராய் என்பவர் இன்று பதவியேற்கிறார்
அசாம் மாநிலத்தில் லோக் அதாலத் நீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவராக சுவாதிபிதான் ராய் என்ற திருநங்கை ஒருவர் நீதிபதியாக இன்று பதவியேற்கிறார்.கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஜோயிதா மோன்தால் நாட்டின் முதல் திருநங்கை நீதிபதியாக பதவியேற்றார்.இதனைத்தொடர்ந்து 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வித்யா கம்ப்ளே நாக்பூரில் 2-வது திருநங்கை நீதிபதியாக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.