February 9, 2018
தண்டோரா குழு
நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கக்கூடாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.
பட்டாசு வெடிக்கும்போது, காற்று மாசு ஏற்படுவதால் சில வடமாநிலங்களில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, சிவகாசியைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளர்கள் அந்தத் தடையை எதிர்த்து போராட்டம் செய்தனர்.
இந்நிலையில்,நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கக்கூடாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.மேலும்,பட்டாசு மூலமாக மட்டுமே சுற்றுச்சூழல் மாசுபடுவது கிடையாது என்று தமிழக அரசு அந்த மனுவில் தெரிவித்துள்ளது.பட்டாசு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.