January 9, 2021
தண்டோரா குழு
நாடு முழுவதும் வரும் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவிந்துள்ளது.
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் சாா்பில் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்ஸின்’ கொரோனா தடுப்பூசி மற்றும் புனேவில் உள்ள சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனமும் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்த ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி ஆகியவற்றை அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த 3-ஆம் தேதி அனுமதி அளித்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.