• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் மிகப்பெரிய எழுச்சி பெறும்-மூத்த நிர்வாகி அருணாசலம் நம்பிக்கை

December 14, 2022 தண்டோரா குழு

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் மிகப்பெரிய எழுச்சி பெறும் என பா.ஜ.க.,வில் இருந்து விலகி மீண்டும் ம.நீ.ம.வில் இணைந்த மூத்த நிர்வாகி அருணாசலம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மையம் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அருணாச்சலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.க.,வில் இணைந்தார்.இதனிடையே அவர் மீண்டும் மக்கள் நீதி மய்யத்தில் அக்ட்சியின்.தலைவர் கமலஹாசனை சந்தித்து மீண்டு கட்சியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் கோவை டவுன்ஹால் அருகே உள்ள தனியார் ஹாலில் ,மீண்டும் புதிதாக இணைந்த அருணாச்சலம் தனது தாய் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.இந்த கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் தங்கவேலு, மாநில செயலாளர்கள் மயில்சாமி, மூகாம்பிகா ரத்தினம்,அனுஷா ரவி மற்றும் திருப்பூர், கோவை,ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்ட செயலாளர்கள் பிரபு, சிட்கோ சிவா, தம்புராஜ், கோபாலகிருஷ்ணன், ஈரோடு பரணி, சசிகுமார், மண்டல அமைப்பாளர்கள் அருணா, மஞ்சுளா, செல்வம் ,சித்திக், ஸ்ரீதர் உட்பட பல்வேறு நிலை நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மக்கள் நீதிமய்யத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் அருணாச்சலம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இரண்டு வருட வன வாசத்திற்கு பிறகு தாய்க்கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கு தாயுள்ளத்தோடு நம்மவர் என்னை அரவணைத்து ஏற்றுக் கொண்டார். தொண்டர்கள் அனைவரும் தாயுள்ளத்தோடு வரவேற்பு கொடுத்தனர். கடைக்கோடி தொண்டர்கள் வரை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி கூற முதற்பயணமாக கோவை வந்துள்ளேன்.

உடனடியாக களத்திற்கு சென்று தொண்டர்களின் கருத்தை கேட்டு அதனை தன்னிடம் கூறுமாறு நம்மவர் என்னிடம் தெரிவித்தார்.அனைத்து மாவட்ட செயலாளர்கள், மண்டல செயலாளர்கள், இங்குள்ளவர்கள் தேர்தலில் உழைத்தமைக்கு நன்றி செலுத்த நான் கடமைப்பட்டுள்ளேன்.
நாடாளுமன்ற தேர்தலில் ம.நீ.ம அமோக வெற்றி பெற்று,மிகப்பெரிய எழுச்சி பெறும் என நம்பிக்கை தெரிவித்த அவர், அதற்கு இது முதல் துவக்கமாக இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க