September 1, 2025
புகழ்பெற்ற நடனக்கலைஞர் டாக்டர் அனிதா ரத்னம் அவர்களின்’நாச்சியார் நெக்ஸ்ட்’ நாட்டிய நாடகம்,கோவையில் முதல்முறையாக அரங்கேற்றப்பட்டு, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.இந்த நிகழ்ச்சி,கோவையின் கலைத் தளத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் அபியாசா அகாடமி ஆஃப் கிளாசிக்கல் டான்ஸ் இணைந்து வழங்கிய இந்த 70 நிமிட நாட்டிய நிகழ்ச்சி,குமரகுரு கல்வி வளாகத்தில் உள்ள ராமானந்த அடிகளார் அரங்கில் நடைபெற்றது.ஆன்மிகப் பெண் கவிஞர் ஆண்டாளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த நாடகம், நடனம், நாடகம்,இசை மற்றும் நவீன அசைவுகளின் கலவையாக அமைந்திருந்தது.
டாக்டர் அனிதா ரத்னத்தின் தனித்துவமான ‘நியோ பரத’ நடன பாணி, பரதநாட்டியம், கதகளி மற்றும் யோகா போன்ற கலைகளை இணைத்து பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இந்த நிகழ்வு,இந்தியாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவிப்பதிலும்,பாதுகாப்பதிலும் ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. இத்தகைய கலை நிகழ்ச்சிகளை கற்றல் மற்றும் அடையாளத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவதற்கான குமரகுரு கல்வி நிறுவனங்களின் அர்ப்பணிப்பை இது மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஸ்பான்சர்களான ப்ரூக்ஃபீல்ட்ஸ், ஸொமேட்டோ,ஆர்வீ ஹோட்டல், அத்வைத லக்ஷ்மி,ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, சுகுணா பம்ப்ஸ் & மோட்டார்ஸ், நல்லாராம், மற்றும் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி ஆகியோருக்கு விழா அமைப்பாளர்கள் சிறப்பு நன்றியைத் தெரிவித்தனர்.
நிகழ்ச்சி குறித்துப் பேசிய டாக்டர் அனிதா ரத்னம்,
“கோவையில் புதிய சிந்தனைகளுக்கான ஆர்வம் மக்களிடையே மட்டுமல்ல,இந்த மண்ணிலேயே புதைந்திருக்கிறது. குமரகுரு போன்ற கல்வி வளாகங்களில் அந்த ஆற்றலை உணர முடிகிறது. இங்கு ‘நாச்சியார் நெக்ஸ்ட்’ நிகழ்ச்சியை நடத்தியது, அடுத்த தலைமுறையினர் ஆண்டாளின் கதையை, பாரம்பரியத்தையும் நவீன படைப்பாற்றலையும் இணைத்து, ஒரு புதிய கோணத்தில் அனுபவிக்க உதவியது. இதுபோன்று கலைக்கு ஆதரவளிக்கும் இடங்கள் கோவையின் கலாச்சார மையமாக மாற உதவும் என நம்புகிறேன்” என்று கூறினார்.