January 23, 2018
தண்டோரா குழு\
நாங்கள் சட்டையை பிடித்து உட்கார வைத்தவர் தான் தற்போதையை முதல்வர். இதே முதல்வர் மீண்டும் சசிகலா காலில் விழும் நேரம் வரும் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“காக்கி சட்டையை போட்டுக்கொண்டு அமைச்சர்களுக்கு ஜால்ரா அடிக்க வேண்டாம் என காவல்துறைக்கு புகழேந்தி அறிவுறுத்தினார். மேலும், தங்களுடைய அணி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்து காவல்துறை அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் வேலுமணியின் பேச்சை கேட்டு செயல்படும் கோவை மாநகர காவல்துறை தெருவில் நிற்கும் என்றும் காலச்சக்கரம் மீண்டும் சுழலும் என்று கூறினார்.
நாங்கள் சட்டையை பிடித்து உட்கார வைத்தவர் தான் தற்போதையை முதல்வர்,இந்த முதல்வர் மீண்டும் சசிகலா காலில் விழும் நேரம் வரும்,அப்போது இவர்களுக்கு ஜால்ரா அடிப்பவர்கள் என்ன செய்வார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் எங்களுக்கு கிடைத்த தகவல்படி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தையோ பிரதமர் மோடி தப்பித்தவறி கூட சந்திக்க மாட்டார். தமிழகத்தில் மக்கள் செல்வாக்குள்ள தலைவர் டிடிவி தினகரன் என மோடி உணர்ந்துவிட்டதாகவும் தெரிவித்தார். மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவு என தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறுவது முற்றிலும் பொய் என்று கூறினார்.
மெரினா கூட்டம் போல மாணவர் பட்டாளமும் , இளைஞர் பட்டாளமும் டிடிவி பின்னால் திரண்டால் அரசால் தாங்க முடியாது.தந்தை பெரியார் விருதை கொண்டு போய் கீழ்த்தரமாண பெண்மணி வளர்மதிக்கு கொடுத்தது வேதனை அளிக்கிறது. துணிவிருந்தால் நாளைக்கே உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவியுங்கள் என்றும் சவால் விடுத்தார்”.இவ்வாறு அவர் பேசினார்.