April 7, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும் பிரபலங்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில்,காவிரி விவகார போராட்டம் தொடர்பாக நடிகர் விவேக் ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில்,
நாங்கள் கேட்பது நீரப்பா!
நீங்கள் தருவதோ சூரப்பா!
அண்ணன் தம்பிகள் நாமப்பா!
நம்மைப் பிரிப்பது நீராப்பா?
அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா!
அன்னைக் காவிரி வேணும்ப்பா.என பதிவிட்டுள்ளார்.