April 15, 2017 
தண்டோரா குழு
                                நயன்தாராவுடன் ஹீரோவாக நடித்து சினிமாவில் கால்பதிப்பேன் என்று சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் பேட்டி அளித்துள்ளார்.
சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனத்துக்கு வந்தார். முருகனுக்கு சிறப்பு பூஜை செய்து ரூ.1 கோடி மதிப்பிலான தங்க வேல் ஒன்றை காணிக்கையாக வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, நான் திரையுலகில் முதல்படமாக நயன்தாராவுடன் நடித்து கால்பதிப்பேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இவருக்கு சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசை தற்போது துளிர்விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவர் ஏற்கனே சரவணா ஸ்டார் விளம்பரத்தில் நடித்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.