• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நம் தேசம் எப்போதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக அமையும் – கீர்த்தி சுரேஷ்

November 29, 2019 தண்டோரா குழு

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் ஒருவர் கொடூரமாக எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. அவருக்கு நீதி வேண்டி கண்டனக் குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் செய்தி இணைய வாசிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. #RIPPriyankaReddy, #JusticeForPriyankaReddy ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது. மேலும், பிரியங்கா ரெட்டி மரணத்துக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களுடைய இரங்கலையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்

இந்நிலையில், பிரியங்கா ரெட்டி மரணம் தொடர்பாக நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பதிவில் கடிதம் ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், “டாக்டர் பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார் என்ற செய்தி என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. மனம் நொறுங்கிவிட்டது. ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. பேச வார்த்தைகள் வரவில்லை. யார் மீது பழி சொல்வது என்பதும் தெரியவில்லை. ஹைதராபாத்தை நான் இதுவரை மிக மிக பாதுகாப்பான நகரம் என எண்ணியிருந்தேன். அங்குதான் இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது. நம் தேசம் எப்போதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக அமையும்.

கொடூர கொலையாளிகள் கைது செய்யப்பட வேண்டும். மனமார்ந்த இரங்கலை அந்தக் குடும்பத்துக்கு உரித்தாக்குகிறேன். இதனைத் தாங்கும் சக்தியை இறைவன் தான் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். நான் கர்மாவின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க