August 19, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நம்ம கோவை இணையதளத்தை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.
தனியார் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நம்ம கோவை இணையதள பக்கத்தை துவங்கியுள்ளன. நம்ம கோவை குழு மூலம் ஏழை மக்கள்,மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் நம்ம கோவை அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் பல்வேறு சமூக பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நம்ம கோவை அமைப்பும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டு தையல் இயந்திரங்கள்,ஆன்லைன் வகுப்பிற்கான செல்போன்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது,
பல்வேறு காரணங்களால அரசு திட்டங்கள் பயனாளிகளை சென்றடைய கால தாமதம் ஏற்படலாம் என்பதால் நம்ம கோவை இணையதளம் மூலம் நடைமுறை சிக்கல்களை சரி செய்து உரிய மக்களுக்கு உதவிகளை கொண்டு சேர்க்க வழிவகுக்கும் என்றார்.
இதனை நமது மாவட்டத்தில் உள்ள நல்ல உள்ளங்கள் இந்த முயற்சியை துவங்கியுள்ளனர் என கூறிய அவர் இதற்காக கடந்த 2 மாதங்களாக பல முறை ஆலோசனை நடத்திய பின்னர் தான் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்பும் இதில் உள்ளது எனவும் எவ்வித தேவைகள் வரும் போதும் உடனடியாக நிவர்த்தி செய்ய முடியும் என்றார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் நம்ம கோவை அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல்கட்டமாக சில மாணவர்களின் ஆன்லைன் வகுப்புக்காக செல்போன், பெண்கள் சிலருக்கு தையல் இயந்திரம் வாங்க காசோலைகள் வழங்கப்பட்டன.