• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நன்றி மறக்காமல் கோப்பையுடன் கமலை சந்தித்த சென்னை ஸ்டார்ஸ் அணியினர்

April 19, 2021 தண்டோரா குழு

மாற்றுத்திறனாளிகளுக்காக துபாய் நாட்டில் நடைபெற்ற DPL போட்டிக்கு செல்ல தமிழகத்தைச் சேர்ந்த சென்னை ஸ்டார்ஸ் அணியின் 18 வீரர்கள் உதவி கேட்டு கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனை 31.03.2021 அன்று நேரில் சந்தித்தனர்.

அப்போது, கமல்ஹாசன் போட்டியாளர்கள் துபாய் போட்டிக்கு செல்ல டிக்கெட் மற்றும் விசா கிடைத்திட உடனடியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூலம் உதவினார். பின்னர் துபாய் சென்று போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றுள்ளனர்.

இந்நிலையில், துபாயிலிருந்து தமிழகம் திரும்பிய வீரர்கள் கோப்பையுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து, வாழ்த்துக்களைப் பெற்றனர்.

மேலும் படிக்க