February 26, 2018
தண்டோரா குழு
நடிகை ஸ்ரீதேவி குளியலறை தொட்டியில் உள்ள நீரில் தவறுதலாக விழுந்து மூழ்கியதால் உயிரிழந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த போது மாரடைப்பால் நேற்று முன்தினம் காலமானார். இந்நிலையில், உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் அறிக்கைகளில் ஸ்ரீதேவி மரணம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதில், குளியலறையில் உள்ள தொட்டியில் இருந்த தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவி மரணமடைந்ததாக கூறப்பட்டுள்ளது. நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அவரது மரணம் விபத்து என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஸ்ரீதேவி மரணத்தில் சதிச் செயல்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்றும் குளியல் தொட்டியில் உள்ள நீரில் மூழ்கிய போது மாரடைப்பு ஏற்பட்டு ஸ்ரீதேவி உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது மட்டுமின்றி ஸ்ரீதேவி ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதும் உடற்கூறாய்வு சோதனையில் தெரிய வந்துள்ளதாக துபாய் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளது.