February 27, 2018
தண்டோரா குழு
நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு செல்ல துபாய் காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக இந்திய துணை தூதரகம் அறிவித்துள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஸ்ரீதேவி கடந்த 25ம் தேதி துபாயில் குளியறையில் இருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையில் அவரது உடல் இந்தியாவிற்கு எப்போது கொண்டு வரப்படும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில்,நடிகை ஸ்ரீதேவியின் உடலை எம்பாமிங் செய்வதற்கான அனுமதி கடிதத்தை துபாய் காவல்துறை வழங்கியுள்ளதாகவும், மேலும்,இன்று இரவுக்குள் ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவுக்குள் இந்தியா அனுப்பப்படும் என்று இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.