• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை ஜூஹி சாவ்லாவின் பிறந்தநாள்: மரக்கன்று நட்டு வாழ்த்து கூறிய காவேரி கூக்குரல் இயக்கம்

November 13, 2021 தண்டோரா குழு

காவேரி நதிக்கு புத்துயீருட்டும் பணியில் தொடர்ந்து பங்காற்றி வரும் பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு காவேரி கூக்குரல் இயக்கத்தின் தன்னார்வலர்கள் மரக்கன்று நட்டு பிறந்த நாள் வாழ்த்து கூறினர்.

இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

“அன்புள்ள ஜூஹி, காவேரிக்கு புத்துயிரூட்டுவதற்கான உங்கள் தளராத உறுதியைக் கொண்டாட, ஆதியோகியின் நிழலில் புரசு மரம் வைத்துள்ளோம் – நீங்கள் வெளிப்படுத்தும் பொறுப்புணர்வின் பாதைக்கு கோடிக்கணக்கான மக்களை இது வரவேற்கும். உங்களுக்கு என் நல்வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

ஜூஹி சாவ்லா அவர்கள் காவேரி கூக்குரல் இயக்கம் தொடங்கப்பட்ட சமயத்தில் இருந்து இப்போது வரை அவ்வியக்கத்திற்கு தொடர்ந்து தனது ஆதரவையும் பங்களிப்பையும் ஆற்றி வருகிறார். தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சினிமா துறையில் இருக்கும் நண்பர்களின் பிறந்தநாட்களின் போது காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு உதவி புரிந்து வருகிறார்.

சுற்றுச்சூழல் மீதான அவரின் அக்கறையை பாராட்டும் விதமாகவும், அவரின் இடைவிடாத உறுதிக்கு நன்றி கூறும் விதமாகவும், ஆதியோகி அருகில் மரக்கன்று நடும் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தையைச் சேர்ந்த ஏராளமான தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க