• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகை சனம் ஷெட்டியின் புகார் வருந்ததக்கது – கோவை விமான நிலைய இயக்குனர் விளக்கம்

January 20, 2023 தண்டோரா குழு

கோவை விமான நிலையத்தில் மத ரீதியான பாகுபாடு காட்டப்பட்டதாக நடிகை சனம் செஷட்டி டிவிட்டரில் வீடியோ வெளியிட்டு அன்மையில் பேசியிருந்தார். யாரிடமும் பாகுபாடு காட்டவில்லை, நடிகை சனம் ஷெட்டியின் புகார் வருந்ததக்கது என கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழில் வெளியான அம்புலி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலம் அடைந்தார். நடிகை சனம் ஷெட்டி அன்மையில் கோவையில் இருந்து சென்னைக்கும் விமானம் மூலம் செல்வதற்கு கோவை விமான நிலையம் வந்திருந்தார். இந்நிலையில் விமான நிலையத்தில் மத ரீதியாக ஊழியர்கள் பாகுபாடு காட்டுவதாக அவரது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது:

கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தேன். வருத்தமான ஒரு நிகழ்வு நடந்தது. அதனை கண்டிப்பாக உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதாவது விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் விமானம் ஏறுவதற்கு முன்பு என்னையும் இரண்டு முஸ்லிம் நபர்களையும் தனியாக அழைத்து சோதனை நடத்தினார்கள். என்னை என் பெயர் காரணத்தினாலும், அவர்கள் முஸ்லிம் ஆடைகள் அணிந்தவாறு இருந்ததாலும் இது போன்று நடந்து கொண்டனர். மொத்தம் 190 பயணிகள் இருக்கும் போது எங்களை மட்டும் தனியாக சோதித்தது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

ஏன் எங்களை மட்டும் தனியாக அழைத்து சோதிக்கிறீர்கள் என கேட்டேன். வழக்கமான சோதனை தான் என்று பதில் சொன்னார்கள். இதை பார்க்கும் போது என்னுடைய கேள்வி என்னவென்றால், அந்த 190 பயணிகளும் எந்த பேக்கும் எடுத்துப் போகவில்லையா அவர்கள் எதுவும் எடுத்து வர வாய்ப்பில்லையா, சோதனை செய்தால் அணைத்து பயணிகளின் பேக்குகளை சோதிக்க வேண்டும். எங்களை மட்டும் இப்படி மத ரீதியாக பாகுபாடு காட்டி சோதனை செய்வது எங்களை புண்படுத்துகிறது. முதலில் மத ரீதியான பாகுபாடுகளை நிறுத்த வேண்டும். இது எவ்வளவு பெரிய கேவலம்.

“இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இந்த புகார் தொடர்பாக கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் நம்மிடம் கூறியதாவது:

கோவை சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களிலும் குடியரசு தினம் வருவதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அனைவரது கை பைகளையும் சோதனை செய்ய உத்தரவு போடப்பட்டுள்ளது. நடிகை சனம் ஷெட்டியின் புகார் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை விமான நிலையத்தில் யாரிடமும் பாகுபாடு காட்டவில்லை.நடிகை சனம் ஷெட்டியின் புகார் வருந்ததக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க