May 23, 2018
தண்டோரா குழு
துத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டிற்கு அரசும் காவல்துறையும் ஒரு நாள் மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று நடிகர் ஹரிஷ் கல்யாண் கூறியுள்ளார்.
துத்துக்குடியில் ஸ்டெர்லைட் அலையை மூடக்கோரி தொடர்ந்து 100- நாட்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான மக்கள் நேர்மையான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த பொதுமக்களை காவல்துறையினர் தடியடி நடத்தியும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
தற்போது துத்துக்குடி முழுவதும் பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது. காவல்துறையின் இந்த நடவடிக்கை கண்டித்து பல சினிமா பிரபலங்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இன்நிலையில் பிக் பாஸ் புகழ் “நடிகர் ஹரிஷ் கல்யாண்” அவரது ட்விட்டர் பக்கத்தில் “தூத்துக்குடியில் நடந்த இந்த மனித நேயமற்ற செயலுக்கு அரசாங்கமும் காவல் துறையினரும் கண்டிப்பாக ஒரு நாள் பதில் சொல்ல வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்கள்’’ என்று தனது ட்விட்டர்யில் பதிவு செய்துள்ளார்.