• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் விவேக் மறைவுக்கு சத்குரு இரங்கல்

April 17, 2021 தண்டோரா குழு

பிரபல நடிகரும் மரம் நடும் ஆர்வலருமான விவேக் அவர்களின் மறைவிற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“விவேக் – தனது கலையில் ஜாம்பவானாகத் திகழ்ந்து, கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்தவர். தமிழ்நாட்டின் மாபெரும் மரங்கள் நடும் திட்டத்தை துவக்கியதற்கும் என்றும் நம் நினைவில் நிற்பார் – அவர் இதயம் இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் துடித்தது. என் ஆழ்ந்த இரங்கல்கள் & குடும்பத்தினருக்கு ஆசிகள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஈஷா அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,

“நடிகர் #விவேக் – ஒரு மகத்தான நடிகர், மக்கள் நலனுக்கு உழைத்தவர், மரங்கள் நடும் சமூக ஆர்வலர், அற்புதமான மனிதர் – அவர் மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விவேக் அவர்கள் ஈஷா பசுமை கரங்கள் திட்டத்திற்கு ஆரம்ப காலம் முதல் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தார். மேலும், காவேரி கூக்குரல் இயக்கத்திற்கும் தனது பேராதரவை வழங்கினார். அவர் ஈஷாவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு மக்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க