• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் விஜய் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

June 22, 2022 தண்டோரா குழு

நடிகர் விஜய் பிறந்த நாள் விழாவை,தளபதி விஜய் மக்கள் இயக்கம் கோவை மாவட்ட மாணவரணியினர்,கோவில்களில் சிறப்பு பூஜை,மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி, வெகு விமரிசையாக கொண்டாடினர்.

நடிகர் வி்ஜய் ஜூன் 22 ஆன இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இந்நிலையில் அவரது பிறந்தநாளை நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக தளபதி மக்கள் இயக்கம் கோவை மாவட்ட மாணவரணி சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தளபதி விஜய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மாவட்ட மாணவரணி தலைவர் பாபு தலைமையில்,கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோணியம்மன் கோவிலில் அவரது பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு, கோவில் முன்பாக கேக் வெட்டி,ஏழை எளியோர் மற்றும் பொதுமக்களுக்கு கேக் வழங்கினர். தொடர்ந்து மாணவ,மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து,கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த ஆறு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.பின்னர் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட மாணவரயினர் இரத்த தானம் செய்தனர்.இந்நிகழ்ச்சியில்,நிர்வாகிகள் செந்தில்,மாரிராஜ்,சரவணன்,நவின் அருண்குமார்சதிஷ்,சுதாமன்,ரத்தினபுரிராஜா, கார்த்தி, நயீம், கோவிந்தராஜ், சிங்கை சுரேஷ், சதிஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க