• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் – அர்ஜுன் சம்பத் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு

November 17, 2021 தண்டோரா குழு

நடிகர் விஜய்சேதுபதிக்கு மிரட்டல் விடுத்ததாக அர்ஜுன் சம்பத் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த 07.11.2021 ஆம் தேதியன்று , இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி ” தேவர் அய்யா அவர்களை இழிவுபடுத்தியதற்காக அவரை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ 1001 / -வழங்கப்படும்” என தனது Twitter பக்கத்தில் பதிவிட்டிருந்தார் . மேற்படி பதிவானது அமைதி மீறுதலை தூண்டும் உட்கருத்துடனும், குற்றமுறு மிரட்டல் விடுத்ததாகவும் உள்ளது.

எனவே இது தொடர்பாக இன்று 17.11.2021 ஆம் தேதி , பி 1 கடைவீதி காவல் நிலைய குற்ற எண்- 633/2021 , U / s 504 , 506 ( i ) IPC ன் படி அர்ஜூன் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு , புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க