December 4, 2020
தண்டோரா குழு
இளையதளபதி நடிகர் விஜய் திரைத்துறையில் 29 வது ஆண்டு கலைபயணத்தை கொண்டாடும் விதமாக கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாணவரணி சார்பாக கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நடிகர் விஜய் திரைப்படத்துறையில் தனது கலை பயணத்தை துவங்கி இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய், நடித்த நாளைய தீர்ப்பு திரைப்படம் 1992 ஆம் ஆண்டு இதே நாள் திரைக்கு வந்தது. தற்போது 29 ஆம் ஆண்டில் விஜய் அடியேடுத்து வைத்துள்ளதை அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தின் கோவை மாவட்ட மாணவரணி சார்பாக இந்த நாளை கொண்டாடும் விதமாக ஆதரவற்ற பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இதற்கான விழா கோவை நூறடி சாலையில் நடைபெற்றது. விஜய் மக்கள் இயக்கத்தின் மாநகர் மாவட்ட தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக நடிகர் விஜயின் கலைபயணத்தின் 29 ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி கொண்டாடினர்.தொடர்ந்து ஏழை பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது. இந்த விழாவில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் தேன் குமார், ரியாஸ், கார்த்தி,நயீம்,செல்வம்,பத்ரி,செந்தில்,மாரிராஜ்,சரவணன்,விமல்ராஜ் உட்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.