• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் ரஜினிகாந்த்தின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி – அமைச்சர் செங்கோட்டையன்

July 16, 2018 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்த்தின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் அமைச்சர் செங்கோட்டையன் அரசு சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகக் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் கல்வியில் சிறப்பாக உள்ளது என்றும்,அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாக செயல்படுகிறார் என்றும் கூறியிருந்தார்.இந்நிலையில்,இன்று சென்னை அண்ணாநகரில் அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“நடிகர் ரஜினிகாந்த்தின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் அரசு சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழகத்திலுள்ள 32 மாவட்ட நூலகங்களில் கல்வித்துறை சார்பாக ஐஏஎஸ் அகாடமிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவகிறது.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சி.ஏ. என்கிற பட்டயக் கணக்காளர் கல்வி படிப்பதற்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் 2019 ஆம் ஆண்டு முதல் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் திறன் வளர்ப்பு பயிற்சி பாடம் கொண்டு வரப்பட உள்ளது.இதன் மூலம் படித்து முடித்தவுடன் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்” என்று கூறினார்.

மேலும் படிக்க