June 27, 2018
தண்டோரா குழு
நடிகர் மன்சூர் அலிகானுக்கு சேலம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.சேலம் – சென்னை இடையேயான எட்டுவழிச்சாலை திட்டம் குறித்து வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகானை சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர் கடந்த 17ம் தேதி கைது செய்தனர்.
பின்னர் சேலம் அழைத்து வரப்பட்ட அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இதையடுத்து, நடிகர் மன்சூர் அலிகான் ஜாமீன் கேட்டு ஓமலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.கடந்த 22ம் தேதி இவரது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.இந்நிலையில், இன்று நடிகர் மன்சூர் அலிகானுக்கு சேலம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.