January 17, 2022
தண்டோரா குழு
நடிகர் தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் பிரிவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வளம்வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் பல மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
தனுஷ் 18 வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில்,தனுஷும் தானும் தனித்தனி பாதையில் பயணிக்க விரும்புவதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவித்தார். இதைப்போல் நடிகர் தனுஷும் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.