• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்டு கூகுள் நிறுவனம் கவுரவம்!

October 1, 2021 தண்டோரா குழு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கௌரவப்படுத்தும் வகையில் அவரது பிறந்த தினமான இன்று (01.10.2021) சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.

மூன்று தோற்றங்களில் சிவாஜி காட்சியளிக்கும் இந்த டூடுலை நூபூர் ராஜேஷ் சோக்ஸி வடிமைத்துள்ளார். சிவாஜியின் பேரனும் நடிகருமான விக்ரம் பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக கூகுளுக்கும், இந்த டூடுலை வடிமைத்த நூபூர் ராஜேஷ் சோக்ஸிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

வரலாற்றின் முக்கிய நாட்களை நினைவுகூர்வதற்காகவும், அரசியல் தலைவர்கள், கலைத்துறையினர், அறிவியல்துறையினர் எனப் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பங்காற்றியவர்களைக் கௌரவிப்பதற்காகவும் இதுபோன்ற டூடுலை கூகுள் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், சிவாஜி கணேசனின் 93வது பிறந்த தினமான இன்று இந்த டூடுல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க