May 23, 2018
தண்டோரா குழு
ஒவ்வொரு உயிரும் மனதை மிகவும் பாதிக்கிறது’ என தூத்துக்குடி சம்பவம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட் செய்துயுள்ளார்.
துத்துக்குடியில் ஸ்டெர்லைட் அலையை மூடக்கோரி தொடர்ந்து 100- நாட்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான மக்கள் நேர்மையான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த பொதுமக்களை காவல்துறையினர் தடியடி நடத்தியும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் இன்று நடைபெற்ற போராட்டத்திலும் போலீஸார் துப்பாகிச்சூட்டில் ஈடுபட்டனர். அதில் காளியப்பன் என்ற 22 வயது இளைஞர் உயிரழந்தார். இதன்மூலம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. தற்போது துத்துக்குடி முழுவதும் பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது. .
இந்த வன்முறைச் சம்பவம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் “தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்த தமிழ் உறவுகளுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறேன். அன்பைப் போதித்த மண்ணில் இழக்கும் ஒவ்வொரு உயிரும் மனதை மிகவும் பாதிக்கிறது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.