February 3, 2018
தண்டோரா குழு
நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
குருதட்சணை திட்டத்தின் கீழ் 65 முதல் 69 வயது வரை உள்ள உறுப்பினருக்கான ஓய்வூதியம் ரூ.500 இல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும், 70 முதல் 79 வயது வரை உள்ள உறுப்பினருக்கான ஓய்வூதியம் ரூ.1000 இல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மாதந்திர ஓய்வூதிய தொகை ரூ 2000 லிருந்து 3000 மாக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது மலேசியாவில் நடைப்பெற்ற நட்சத்திர கலைவிழா மூலம் நமது சங்க கட்டட பணிக்கு வந்த நிதி உதவியிலிருந்து தங்களது வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு இந்த ஓய்வூதியம் உயரத்தப்பட்டுள்ளது என்றும்,இந்த உயர்த்தப்பட்டு ஊதிய தொகை 2018 பிப்ரவரி முதல் அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.