• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் சங்கத்திற்காக ரஜினி கமல் ஓன்று சேர்கின்றனர்.

March 17, 2016 முகமது ஆஷிக்

இந்திய சினிமாவே ஒரு இடத்தை வியந்து பார்க்கிறது என்றால் அங்கு ரஜினி, கமல் இருக்கும் இடமாக தான் இருக்கும். அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் சந்திக்கும் ஒரு நிகழ்ச்சி விரைவில் நடைபெற்றவுள்ளது.

நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க ஏப்ரல் 17ம் தேதி மாபெரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படவுள்ளது. இதை நேரில் காண ரஜினி, கமல் ஆகியோர் வரவுள்ளனர். இவர்கள் மற்றுமின்றி நடிகர்கள் சங்கம் சார்பில் விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

மேலும், மும்பை, கேரளா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களை சேர்ந்த நடிகர்களும் கலந்துகொள்கின்றனர். ரசிகர்கள், மக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கிறோம் என நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை கமிஷனரிடம் மனு அளித்துள்ளார். நடிகர் சங்க தலைவர் நாசர்.

மேலும் இந்த நட்சத்திர கிரிகெட் போட்டி ‘6 ஓவர்கள் கொண்ட போட்டியாக காலை முதல் நடைபெறும். 8 நட்சத்திர அணிகள் பங்கேற்கின்றன. 50 நடிகர்கள் போட்டியில் விளையாடுகின்றனர். 50 நடிகைகள் உற்சாகப்படுத்துவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க