• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

June 1, 2018 தண்டோரா குழு

நடிகர் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நடிகரும்,பா.ஜ.க.பிரமுகருமான எஸ்.வி.சேகா் பெண் பத்திரிக்கையாளா்கள் குறித்து மிகவும் கீழ்த்தரமான வகையில் தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.இவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடா்ந்து தனது பதிவை அவா் நீக்கிவிட்டார்.

இதனையடுத்து நடிகர் எஸ்.வி.சேகர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து அவரை கைது செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இதில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும்,விசாரணை நீதிமன்றத்தை அணுக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதோடு,எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக எஸ்.வி.சேகருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க