• Download mobile app
14 Jan 2026, WednesdayEdition - 3626
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடவடிக்கையை கூடிய விரைவில் காண்பீர்கள் – தமிழக முதல்வர்

January 19, 2017 தண்டோரா குழு

ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கையை மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு எடுக்கும். மாநில அரசின் நடவடிக்கையைக் கூடிய விரைவில் காண்பீர்கள்” என முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

புது தில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியைத் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர் புது தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

“தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசு அவசர சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் எனவும், தமிழகத்தில் பருவமழை பொய்த்ததன் காரணமாக கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால், வறட்சி நிவாரண நிதியாக 39 565 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் எனவும் கடிதம் மூலமாக பிரதமர் மோடியிடம் கேட்டிருந்தேன்.

இது குறித்து நேரில் சந்தித்துப் பேசவும் பிரதமரிடம் நேரம் ஒதுக்க கேட்டிருந்தேன். இதனையடுத்து பிரதமர் வியாழக்கிழமை காலையில் சந்திக்க எனக்கு நேரம் ஒதுக்கினார்.

நானும் பிரதமரைச் சந்தித்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினேன். பிரதமர் மிகவும் பரிவுடன் நமது கருத்தைக் கேட்டார். இந்தப் பிரச்னையில், தமிழக உணர்வுக்கு மிகுந்த மதிப்பளிப்பதாகவும், ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் எனவும் பிரதமர் மோடி என்னிடம் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கையை மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு எடுக்கும். மாநில அரசின் நடவடிக்கையைக் கூடிய விரைவில் நீங்கள் காண்பீர்கள். நன்மையே யாவும் நன்மையே விளையும்.”

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மேலும் படிக்க