• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடப்போம்‌ நலம்‌ பெறுவோம்‌ 8 கிமீ தூரம்‌ நடைபாதையில் ஆட்சியர் ஆய்வு

October 30, 2023 தண்டோரா குழு

தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 4ம் தேதி சென்னையிலிருந்து ”நடப்போம்‌ நலம்‌ பெறுவோம்‌” என்ற நடைபயிற்சி திட்டத்தினை அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி வைக்கவுள்ளார்கள்.

கோவை மாவட்ட பொது மக்களின்‌ நலன்‌ மற்றும்‌ ஆரோக்கியத்தை கருத்தில்‌ கொண்டு “நடப்போம்‌ நலம்‌ பெறுவோம்‌” என்கிற இத்திட்டத்திற்கு, ரேஸ்கோர்ஸ்‌ ஈஸ்ட்‌ கிளப்‌ ரோட்டில்‌ தொடங்கி – திருச்சி சாலை – GHசிக்னல்‌ – வாலாங்குளம்‌ (முழு சுற்று) -GHசிக்னல்‌ – திருச்சி சாலை – வெஸ்ட்‌ கிளப்‌ ரோடு – ரேஸ்கோர்ஸ்‌ (முழு சுற்று) – ஈஸ்ட்‌ கிளப்‌ ரோட்டில்‌ முடியும்‌ வகையில்‌ 8 கிமீ தூரம்‌ கொண்ட நடைபாதையை கண்டறிந்து ஆரோக்கியமான நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதை, மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, மற்றும் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

நடப்போம்‌ நலம்‌ பெறுவோம்‌” எனும்‌ நோக்கில்‌ மாவட்டத்தில்‌ மாவட்ட ஆட்சி தலைவரால்‌ நியமிக்கப்பட்ட குழு 8 கிமீ தூரம்‌ கொண்ட நடைபாதையை கண்டறிந்துள்ளது. அனைவருக்கும்‌ நலவாழ்வு பேணுவதற்கான நடைப்பயிற்சி பிரதி மாதம்‌ முதல்‌ ஞாயிற்றுக்கிழமை தோறும்‌ நடைபெறும்‌.இந்த நடைபயிற்சியின்‌ முடிவில்‌ ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும்‌ நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்‌ மற்றும்‌ சிறப்பு மருத்துவ முகாம்கள்‌ நடத்தப்படும்‌.

மேலும்‌, உள்ளூர்‌ மக்களுடன்‌ இணைந்து மாவட்ட அலுவலர்கள்‌, சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்‌ ஆகிய அனைவரும்‌ சுகாதார நடைப்பயிற்சியில்‌ பங்கேற்பார்கள்‌.நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பாதையில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு இயன்முறை மருத்துவர், ஒரு தன்னார்வலர், சுகாதாரப் பணியாளர், ஆகியோரை கொண்ட மருத்துவக் குழுவின் உதவி மையம் அமைக்கப்படவுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்கள் விடுதியின் முன்பக்கத்தில் நடைப்பயிற்சிக்கான நுழைவு வாயில் தொடங்கி, 1வது கி.மீக்கு வாலாங்குளம் மக்கள் நடைபாதை முன்பக்கத்திலும், 2வது கி.மீக்கு மேற்கில் உள்ள உணவகம் அருகிலும், 3-வது கி.மீக்கு மனு மருத்துவமனை அருகிலும், 4வது கி.மீக்கு டிடிடீசி ஹோட்டல் அருகிலும், 5வது கி.மீக்கு மேற்கு கிளப் ரோடு, ஐடிசி ஹோட்டல் அருகிலும்,6வது கி.மீக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் முன்பகுதியிலும், 7வது கி.மீக்கு டி ஸ்டேன்ஸ் கம்பெனி லிமிட் முன்பகுதியிலும், 8வது கி.மீக்கு Zone -4 -அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்கள் விடுதி முன்பகுதியிலும், என ஒவ்வொரு கி.மீ தூரத்திற்கும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின்‌ தரவுகளின்படி 10,000 அடிகள்‌ அதாவது 8 கி.மீ நடப்பதால்‌ நீரிழிவு மற்றும்‌ இரத்த அழுத்த நோய்கள்‌ 28 சதவீதமும்‌, இதய நோய்‌ தாக்கம்‌ 30 சதவீதமும்‌ குறைகின்றது என்று அறியப்படுகிறது. நடைபயிற்சியானது மக்களை சுறுசுறுப்பாகவும்‌ ஆரோக்கியமான எடையுடன்‌ இருக்கவும்‌ நாள்பட்ட உடல்‌ பிரச்சனைகள்‌ மற்றும்‌ மன அழுத்தத்தை குறைக்கவும்‌ உதவுகிறது. இந்த நடைப்பயிற்சி வயதானவர்கள் முதல் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

மேலும் படிக்க