• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடனமாடிக் கொண்டு சிகிச்சை அளித்த மருத்துவர்

May 31, 2018 தண்டோரா குழு

அமெரிக்காவில் மருத்துவர் ஒருவர் கையில் கத்தியுடன் நடனமாடிக்கொண்டு அறுவை சிகிச்சை செய்யும் வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது.

அமெரிக்காவில் தோல் மருத்துவராக பணிபுரிபவர் விண்டெல்.இவர் ஜார்ஜியா என்னும் பகுதியில் வசித்து வருகிறார்.இவர் தற்போது நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.அதனை பார்த்த மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.அந்த வீடியோவில் விண்டெல் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது கையில் கத்தியுடன் பாட்டு பாடியும் நடனம் அடிக்கொண்டும் சிகிச்சை செய்துகொண்டிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.இதுக்குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.போலீசார் விசாரணை நடத்திய போது கடந்த 2016ல் திருமணம் நடைபெறுவதற்கு முன் தனது தொப்பையை குறைக்க வேண்டும் என அறுவை சிகிச்சைக்கு ஒரு பெண் இவரிடம் வந்தார்.அப்போது இந்த மருத்துவரின் தவறினால் அந்த பெண்ணிற்கு இதய செயல்பாடு நின்று விட்டது. தன் பின் அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து விசாரணையில் விண்டெல் அறுவை சிகிச்சை செய்வதற்கு உரிமம் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.அதன் பின் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க