January 30, 2018
தண்டோரா குழு
கொளத்தூர் நகைக்கடை கொள்ளையன் நாதுராமுக்கு 10 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி கொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கொள்ளையன் நாதுராம் உட்பட 3 பேரை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தாக்கல் செய்யப்பட்ட மனு எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தாக்கல் செய்த மனுவை ஏற்று நாதுராம் கூட்டாளிகள் தினேஷ் சவுத்ரி, பத்தாராமையும் 10 நாள் விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.