• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவையில் காவல் துறை கொடி அணிவகுப்பு

February 8, 2022 தண்டோரா குழு

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவை சிவானந்தகாலனியில் காவல் துறை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

கோவையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி தேர்தலில் வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக கொடி அணிவகுப்பு மாநகர காவல் துறை சார்பில் இன்று நடைபெற்றது.இந்த கொடி அணிவகுப்பில் 300 போலீசார் மற்றும் காவல்துறை ரோந்து வாகனங்கள் பங்கேற்றன. சிவானந்தா காலனி, சங்கனூர், ரத்தினபுரி ஆகிய பகுதிகளின் வழியாக செல்லும் கொடி அணிவகுப்பு மீண்டும் சிவானந்தா காலனியில் நிறைவடைந்தது.

கோவையில் தேர்தல் பாதுகாப்பிற்காக 1400 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் ஒரு காவல் நிலையத்திற்கு 10 பேர் வீதம் 150 அதிரடிப்படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள முப்பத்தி இரண்டு பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க