• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

த.பெ.தி.கவினர் பத்து பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

February 27, 2020

த.பெ.தி.கவினர் பத்து பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டதை கண்டித்து அனைத்து கட்சி அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடந்த துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் குறித்து உயர்வாகவும் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவு செய்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பல அமைப்புகள் ரஜினியின் வீடு,துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் தபெதிகவினர் 10 பேர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக வழக்கு பதிவு செய்யபட்டு கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டனர்.

இந்நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை கண்டித்து த.பெ.தி.க, எஸ்.டி.பி.ஐ, வி.சி.கே தமிழ்புலிகள், ஏ.ஐ.சி.சி.டி.யு, சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம், மே 17 இயக்கம் தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த ஆர்பாட்டத்தின் போது தமிழக அரசு உடனே இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் படிக்க