May 29, 2018
தண்டோரா குழு
திமுக செயலாளர் துரைமுருகனிற்கு தோனி கையெழுத்திட்ட மஞ்சள் ஜெர்சி டி ஷர்ட்டை பரிசாக வழங்கினார்.
தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியை தோற்கடித்து கோப்பையை வென்றது சிஎஸ்கே அணி.இதனையடுத்து நேற்று கோப்பையுடன் வந்த சிஎஸ்கே வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து திமுக செயலாளர் துரைமுருகன் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.அதன் பின் தோனி அவர் கையெழுத்திட்ட டி ஷர்டை துரைமுருகன் அவருக்கு பரிசாக கொடுத்தார்.மேலும் தோனியுடன் இணைத்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.