• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொழில் முனைவோர்களை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

September 28, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் வேளாண் காடுகள் சார்ந்த தொழில் முனைவோர்களை உருவாக்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகமும் சென்னையில் உள்ள சிறு மற்றும் குறு தொழில் குழுமமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

வேளாண் காடுகள் கூட்டமைப்பின் இரண்டாம் ஆண்டு கருத்தரங்கு மேட்டுப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் மரம் சார்ந்த தொழிற்சாலைகள், விஞ்ஞானிகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள், இதர துறைகளை சார்ந்த அலுவலர்கள், முன்னோடி விவசாயிகள், மர அறுவடை மற்றும் விற்பனைக் குழுக்கள், நிதி மற்றும் கிராமப்புற நிறுவனங்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த உறுப்பினர்கள் ஏழு மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டனர்.

வேளாண் காடுகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும் மற்றும் துறைத் தலைவர் பார்த்திபன் வரவேற்புரையாற்றி இக்கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் குளோனல் முறையில் மரம் வளர்ப்பு, மரம் அறுப்பு, விற்பனை செய்தல், மதிப்பு கூட்டல் ஆகிய மேம்பாடுகள் குறித்தும், குறைந்த பட்ச ஆதார விலை மரங்களான தேக்கு, குமிழ், சுபாபுல், மலைவேம்பு, கடம்பா, சவுக்கு, தைலம், மகாகனி மற்றும் வேம்பு மரங்களுக்கான விலை நிர்ணையம் பற்றி எடுத்து கூறினார்.

வனக்கல்லூரியின் முதல்வர் தீபக் வத்ஸ்வா, வேளாண் காடுகள் மற்றும் தோட்டக்கலை மற்றும் மரங்கள் ஒருங்கிணைந்து வளர்க்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். வனத்திற்கு வெளியே மரங்கள் வளர்ப்பதன் அவசியத்தையும் வறட்சியை தாங்கி வளரக்கூடிய மர வகைகள் கண்டுப்பிடிக்கபட வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமும் சென்னையில் உள்ள சிறு மற்றும் குறு தொழில் குழுமமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

இந்தஒப்பந்தத்தின்படி வேளாண் காடுகள் சார்ந்த தொழில்முனைவோர்களுக்கு உயிர் எரிசக்தி சார்ந்த எரிகட்டி தயாரிக்கும் தொழில்நுட்பப் பயிற்சி கொடுக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் இராமசாமி பேசுகையில், நாட்டு மரங்கள் வளர்ப்பதன் அவசியத்தை பற்றியும் மருந்து பொருட்கள் மற்றும் விவசாயத்திற்கு உதவும் கருவிகள் அனைத்தும் நாட்டு மரங்களிலிருந்தே செய்யப்படுகின்றன என்றும் கூறினார்.

மேலும் படிக்க