• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொழில்நுட்ப சேவையை சர்வதேச தரத்தில் திறன் உருவாக்க கோவை.கோ விரிவாக்க திட்டம் துவக்கம்

December 22, 2021 தண்டோரா குழு

கோவையில் அறிவுசார் மேலாண்மை பன்னோக்கு தயாரிப்பு மென்பொருள் சேவை நிறுவனமாக உள்ள இந்தியாவில் கோவையிலும் ,இங்கிலாந்திலும், லண்டனிலும் செயல்பட்டு வருகிறது.இன்று கோவையில் 40,000 சதுரடியிலான அலுவலகம் துவக்கியுள்ளது.

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப முதன்மை செயலர் டாக்டர் நீரஜ்மிட்டல் ஐ.ஏ.எஸ்., துவக்க விழாவில் பங்கேற்று துவக்கி வைத்தார்.
கோவை.கோ சர்வதேச அளவில் 2000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.கடந்த 18 மாதங்களில், 60 உறுப்பினர்களைக் கொண்டிருந்த நிறுவனம், 250 உறுப்பினர்களுக்கும் மேலாக உயர்த்தியுள்ளது.

தொடர்ந்து வலிமையான வணிக வளர்ச்சி , புதிய தயாரிப்புகள் அறிமுகம் மற்றும் கையகப்படுத்துதலால் இந்த வளர்ச்சியை எட்டியுள்ளது. வரும் 2030 ம் ஆண்டிற்குள் கோவை.கோ மென்பொருள் சேவை துறையில் இந்தியாவிலும், சர்வதேச முத்திரை பதிக்க , புதிய அலுவலகம் ஒரு மையமாக செயல்படும். இதில் அளவிலும் அமைந்துள்ள அதிநவீன வசதிகள்,வேலைக்கும் வாழ்க்கைக்கும் சமநிலை காணுதல்,பொழுதுபோக்கு மற்றும் மகிழ்வான பணி நேரங்களுக்கும் இதில் வசதிகள் அமைந்துள்ளன.

கோவை.கோ நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சரவணக்குமார் நிறுவனம் குறித்து விவரித்தார்.

மேலும் படிக்க