• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொழில்துறை மீண்டு எழ பம்ப் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்த சீமா கோரிக்கை

October 30, 2021 தண்டோரா குழு

தொழில்துறை மீண்டு எழ பம்ப் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா) மற்றும் இந்திய பம்ப் உற்பத்தியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சீமா தலைவர் கார்த்திக் கூறியிருப்பதாவது:

மூலப்பொருட்களின் விலை உயர்வால் பம்ப்செட் உற்பத்தியாளர்கள் ஓராண்டில் ஐந்தாவது முறையாக விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மோட்டார்கள் மற்றும் பம்புகளில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருளான தாமிரத்தின் விலை கடந்த ஆண்டை விட தற்போது 65 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும் கேபிள் விலை மாற்றியமைக்கப்படுகிறது.

மோட்டார்களுக்குப் பயன்படுத்தப்படும் அலுமினியத்தின் விலை 68 சதவீதத்திற்க்கும் அதிகமாகி உள்ளது. லேமினேஷன் ஸ்டீல், தேனிரும்பு மற்றும் வார்ப்புகளின் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாகியுள்ளது. டீசல் விலை உயர்வால் மூலப்பொருள்கள் மற்றும் பம்ப் உற்பத்திக்கான போக்குவரத்து செலவுகளும் அதிகரித்துள்ளன.

இந்த மிகப்பெரிய விலை உயர்வால், பம்ப் கொள்முதல் மற்றும் பம்ப் தயாரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், இந்திய சந்தையில் பம்புகளுக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் பம்ப்செட் தேவை குறைந்துள்ளதால் பம்ப்செட் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தி நிலையில் 40 சதவீதம் மட்டுமே வேலை செய்கிறார்கள். இதனால் இந்த தீபாவளி சீசனில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க இயலாத நிலை உள்ளது.

விவசாயத்திற்கு அடுத்தபடியாக உற்பத்தி தொழில்தான் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை அளிக்கிறது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்னும் இலக்கை அரசு நிர்ணயித்து இருக்கும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 2 கோடி வேலைவாய்ப்புகளை இந்த துறை இழந்துள்ளது.

மூலப்பொருட்கள் விலை மேலும் இந்த துறையில் அதிக வேலை இழப்புகளை ஏற்படுத்தும். தொழில்துறை மீண்டும் எழ ஒன்றிய அரசு, போர்க்கால அடிப்படையில் உடனடியாக பம்ப் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விலையில் தலையிட்டு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க